கலப்பை மக்கள் இயக்கம் நடத்திய சமத்துவப் பொங்கல் விழா 12-01-2025

 கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக, சமத்துவப் பொங்கல் விழா 12-01-2025 ஞாயிற்றுக் கிழமை கன்னியாக்குமரி, ரஸ்தாகாடு கடற்கரையில் நடைபெற்றது. கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. பி.டி. செல்வகுமார் (P.T. Selvakumar) அவர்கள் தலைமையில், கன்னியாக்குமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. V. விஜய்வசந்த் M.P அவர்கள் பொங்கல் விழாவைத் துவங்கிவைத்தார். 


சிறப்பு விருந்தினர்களாக Dr. T. ஜான்சன், மற்றும் திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு மத குருமார்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். 

மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் 11 ஆண்டுகளாக இந் நிகழ்ச்சியை நடத்திவருகிறது கலப்பை மக்கள் இயக்கம். இந்த வருட சமத்துவப் பொங்கல் விழா 2008 பானைகளில் கோலாகலமாக கொண்டாடப் பட்டது.


















 











Post a Comment

Previous Post Next Post