கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமாரின் மக்கள் நலப் பணிகள்

 


குமரி நெல்லை இரு மாவட்டத்தின் எல்லில் அருகில் உள்ள குக்கிராமம் ரஜகிருஷ்ணாபுரம். இந்த ஊரில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பி.டி. செல்வகுமார். 

சிறு வயது முதலே சமூக சேவையில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் விவேகானந்தா கல்லூரியில் படிக்கும்போது என்.சி.சி. என்.எஸ்.எஸ். உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஏராளமான சமூக பணிகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் சினிமா மீது கொண்ட தீராத காதல் காரணமாக சென்னைக்கு சென்றாலும் முதலில் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் இரவு பகலாக வேலை பார்த்துள்ளார். பின்னர் ஜெமினி சினிமா நிறுவனத்தின் பத்திரிகையில் நிருபர் வேலைக்கு சேர்ந்த இவர் வெகு சீக்கிரம் சப் எடிட்டராக பதவி உயர்வு கிடைத்துள்ளது. அயராது உழைத்தபடி அங்கும் இங்கும் பம்பரமாய் சுழன்று வேலை செய்த பி.டி. செல்வகுமாரின் மீது நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகரின் பார்வை விழுந்தது. அன்று முதல் நடிகர் விஜய்யின் பர்சனல் பிஆர்ஓவாக உருவெடுத்தார் பிடி செல்வகுமார். அதன் பிறகு இவர் சினிமா துறையில் படைத்தது எல்லாம் இமாலய சாதனைகள். அதன் பின்னர் ஏராளமான படங்களுக்கு பிஆர்ஓ பணி செய்தார். தனது சொந்த தயாரிப்பில் நடிகர் பிரபுவை வைத்து திரைப்படம் இயக்கினார். பின்னர் நடிகர் விஜய் நடித்த பிரபல திரைப்படமான புலி இவரால் தயாரிக்கப்பட்டது. 

தமிழ் திரைப்பட துறையில் 8 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள இவர் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வெளியிட முடியாமல் தவித்து வந்த 130க்கும் மேற்பட்ட படங்களை தனது சொந்த முயற்சியால் ரிலீஸ் செய்துள்ளார். இந்த நேரத்தில் தான் சிறுவயதில் அவருக்கு மனதில் இருந்த சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அப்போது உதித்தது இவர் தலைமையிலானகலப்பைமக்கள் இயக்கம். 

இதனைத் தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பினார். மேலும் சினிமா துறையில் மூலமாக தான் சேர்த்து வைத்த செல்வத்தையும், அவருக்கு இருந்த சினிமா தொடர்புகளையும் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் சமூக சேவை செய்வதற்காக பயன்படுத்திக் கொண்டார். குமரி மாவட்டம் ரஸ்தாகாடு கடற்கரையை தூய்மை செய்து சுமார் 508 பானையில் பெண்களை வைத்து நடத்திய சமத்துவ பொங்கல் ஆகட்டும், மருந்துவாழ் மலை அடிவாரத்தில் கரோனாவை ஒழிக்க வேண்டி சுமங்கலிகளை வைத்து கோபூஜை நடத்தினார். மேலும், சென்னையில் பர்மா அகதிகள், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இவர் காரோனா நிவாரண உதவிகள் வழங்கினார். மேலும் குமரியில் 25 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கியது. ஈரானில் சிக்கி தவிக்க மீனவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். 

இந்த கரோனா ஊரடங்கு காலம் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து 100 நாட்கள் கடந்து அரிசி, நிவாரணங்கள் வழங்கி வருகிறார். இதுவரை காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தினமும் 100 பேர் வீதம் வழங்கி மக்களின் துயரத்தை துடைத்து வருகிறார். இந்நிலையில் கு குமரி மாவட்டத்தில் அனுமன் சுமந் சுமந்து சென்ற உயிர்காக்கும் சஞ்சீவி மூலிகை உட்பட லட்சக்கணக்கான மூலிகைகள் அமைந்துள்ள மருந்துவாழ் மலை உள்ளது. இதன் அருகில் பொட்டல்குளத்தில் அமைந்துள்ளது ஐய்யன் மலை. இந்த மலையில் பிரம்மாண்டமான ஸ்ரீ குபேர மூலிகை தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுமார் 6 ஆயிரத்து 800க்கும் க்கும் மேற்பட்ட மூலிகைகளின் காற்று இந்த மண்டபத்திற்குள் வந்து செல்லும் வகையில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மகத்துவம் நிறைந்த தியான மண்டபத்தை கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும் பிரபல சினிமா இயக்குனருமான பி.டி.செல்வகுமார் தனது சொந்த செலவில் கட்டியுள்ளார்.



Post a Comment

Previous Post Next Post