விஜய் நற்பணி மன்ற செயலாளர் குடும்பத்துக்கு நிதியுதவி செய்த பிடி.செல்வகுமார்

 

விஜய்  மக்கள் மன்றத்தின் முன்னாள் குமரி மாவட்ட செயலாளர் எட்வின்(40) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  விஜய் மன்றத்திற்காக  25 ஆண்டுகள் ஓடி ஓடி உழைத்த எட்வின் மறைந்த  துயரச் செய்தியைக் கேள்விப்பட்டதும் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி.டி.செல்வகுமார்  ஓடோடிச்சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். 

எட்வின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார் பி.டி.செல்வகுமார்.   அப்போது செய்தியாளர்கள், எட்வின் மரணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு,  ‘’இளைஞர்கள் எல்லோரும் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும்.  உடல்நலத்தில் அதிக கவனம் மேற்கொள்ள வேண்டும்.  இது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ரசிகர்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் வைக்கும்  பனிவான வேண்டுகோள்’’ என்று  தெரிவித்தார் பி.டி.செல்வகுமார்.








Post a Comment

Previous Post Next Post