நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட அனைத்து கட்சிகளின் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நாளை (3-ந்தேதி) நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்க அனைத்து கட்சிகளுக்கும் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜய் நடித்த 'புலி' திரைப் படத்தின் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமாரின் தலைமையிலான கலப்பை மக்கள் இயக்கத்துக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத் தில் கலப்பை மக்கள் இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்து அதன் நிறுவனரான பி.டி.செல்வகுமார் பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் எங்களது அமைப்பின் கருத்தை பதிவு செய்ய அழைப்பு விடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஏழை-எளிய மக்கள் சமுதாயத்தில் பின் தங்கிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு சமூக நல பணிகள் செய்து வரும் எங்களது சேவைக்கு அரசு அளித்த அங்கீகாரமாகவே இந்த அழைப்பை கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
04-03-2025 மாலை மலர் செய்தி